Breaking News

Monthly Archives: August 2021

மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஒருவாரத்துக்கு நாட்டை முழுமையாக முடக்குமாறு, கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

Read More »

அரசாங்கத்தை நம்பி பயனில்லை; எல்லே குணவங்ச தேர்.

கொரோனா தாக்கத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து கொண்டு அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காமல் தமக்குரிய பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்கள் மாத்திரம் அல்ல அரசியல் வாதிகளும் பொறுப்புடனும், விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண்டும். அரசாங்கம் இன்று பலவீனமடைந்துள்ளது. ஆலோசனை வழங்கி இனி பயன் இல்லை. கொரோனா …

Read More »

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் நேற்று(18)  காலமானார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர்  ,மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்றுக் காலை  உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி,உப்போடையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் குறித்த கட்சியின்  மகளிர் அணியைக் கட்டியமைப்பதில் பாரிய பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More »

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நித்யானந்தா;

மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தன்னை நித்யானந்தா அறிவித்துள்ள நிலையில், அவருக்கும் மடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292 வது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த அருணகிரி நாதர் கடந்த ஓகஸ்ட் 13 அன்று இரவு உடல்நல குறைவால் காலமானார். அவருடைய …

Read More »

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 11 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கராயன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார்  மேறக்கொண்ட நடவடிக்கையின் போதே, சந்தேக நபர், முதிரை மரக் குற்றிகளுடன் கைதுசெய்யப்பட்டார். சந்தேக …

Read More »

புதுக்குடியிருப்பை பூட்ட தீர்மானம்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த நிலையங்களை, சனிக்கிழமை (21)  தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை வரை பூட்டுவதற்கு, புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கம், இன்று (19) தீர்மானம் எடுத்துள்ளது. இந்த நாள்களில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மருந்தகங்கள், டயர் ஒட்டுக்கடைகள் என்பன மாத்திரம் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டோ சங்க நிர்வாகம், சிகை அலங்கரிப்பு சங்க …

Read More »

விறகு வெட்டிக் கொண்டிருந்தவர் திடீரென மரணம்; முல்லைத்தீவில் சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில் திடீரென சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (18) காலை இடம்பெற்றுள்ளது. வள்ளுவர்புரம் றெட்பானா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய செனவிரத்தின சமரக்கோன் என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு …

Read More »

நாடு முடங்குமா? முடங்காதா? இறுதி முடிவு நா​ளை நண்பகல்.

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 செயலணி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடும். அந்த வகையில், நாளைக்கும் அந்த செயலணி கூடவுள்ளது. இதன்​போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமையவே, அடுத்தக்கட்டத் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன. ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் …

Read More »

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தொடக்கம் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

Read More »