Breaking News

Uncategorized

164 வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதி கோரும் பசில் ராஜபக்ச!

164 வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையில், அனுமதி கோரியுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்காக இவ்வாறு இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். நோயாளர் காவு வண்டிகள், நீர் தாங்கி வாகனங்கள், டபள் கெப் வாகனங்கள் உள்ளிட்ட 164 வாகனங்கள் இவ்வாறு கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சரவையினால் சில வகை வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி இந்த வாகனங்கள் கொள்வனவு …

Read More »

இரா.சம்பந்தன் தலைமையிலான குழு விரைவில் பஸீலை சந்திக்கும்!

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஸ்தாபகத்தவைரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமான சந்திப்பொன்றை விரைவில் நடத்தவுள்ளது. இந்தச் சந்திப்புக்கான பூர்வாங்க செயற்பாடுகளை இறுதி செய்யும் வகையில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் …

Read More »

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையில்; திங்கள் முதல் சுற்றிவளைப்புகள்.

பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விடயத்தை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முறையற்ற வகையில் …

Read More »

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் அறிவித்தது. “நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு முடிவும் எட்டப்படும்” என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார். நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ், மிகவேகமாக பரவிவரும் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  வைரஸ் தொற்றுவதில் …

Read More »

வடக்கில் பெருமளவானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

“வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கொரோனாத் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் நேற்று வரை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கொரோனாத் …

Read More »

உணவுக்கே வழியில்லாமல் கதறி அழுத முதியவர்.. உதவிக் கரம் நீட்டிய காணொளி.. மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!..

நீண்ட ஆண்டுகளாக சிற்றுண்டி உணவகம் நடத்தி வரும் முதிய தம்பதிகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர்களது கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது. டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் நீண்ட காலமாக தள்ளுவண்டியில் முதிய தம்பதிகள் சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சமீப மாதங்களாக அவர்களது சிற்றுண்டி கடைக்கு வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துள்ளது. நாளுக்கு நாள் யாருமே வராததால் பலருக்கு உணவளித்த அவர்கள் உணவுக்கே சிரமப்படும் நிலை …

Read More »

வெலிசறை ஆடைத் தொழிற்சாலையிலும் கொ ரோனா – மினுவாங்கொட தொழிற்சாலையில் மேலும் ஐவருக்கு தொற்று உறுதி..

நாட்டில் மேலும் ஐந்து கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் நான்கு பேரும், வெலிசறை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் இவ்வாறு கொ ரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் தூய்மைப்படுத்தும் பணியாளர் ஒருவருக்கும் கொ ரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாமங்கடை ஈஸ்வரி வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, வெகன் ஆர் ரக மகிழூர்தியும் ஸ்போர்ட்ஸ் ரக அதி சொகுசு மகிழூர்தி ஒன்றுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் உயிரிழந்த நபர் வெகன் ஆர் ரக மகிழூர்தியில் பயணித்த பெண்ணொருவர் …

Read More »

யாழில் குடும்பங்களிற்கு இடையே கைகலப்பு!! சிறுமியின் கழுத்தில் பாய்ந்த கத்தி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே படுகாயமடைந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியது. அதன் …

Read More »