Breaking News

மரண அறிவித்தல்கள்

மாடு வெட்டுவதற்கு எதிர்ப்பு!! பூசகரிற்கு நேர்ந்த பரிதாபம்

புங்குடுதீவில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் …

Read More »

சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். கவலைக்கிடமாக இருந்த அவருக்காக இசை ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்தார்கள். அதற்கு பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாக …

Read More »

தாய்,தந்தை எதிர்ப்பை மீறி காதலனுடன் திருமணம்!! தீயில் கருகி பலியான யுவதி

பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலரையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே, மகள் ஒரு மாணவனை விரும்புவது தெரிந்ததும் பாடசாலைக் கல்வியை பெற்றோர் இடைநிறுத்தியுள்ளனர். ஒரு வருடமாக பாடசாலை செல்லாதிருந்த காதலியைத்தேடி தளவாயைச் சேர்ந்த காதலன், அந்த யுவதியின் வீட்டுக்கு 27-02-2020 அன்று சென்று,”என்னை விரும்பியது உண்மையென்றால், இப்பவே என்னோடு வா” என்று …

Read More »

பட்டதாரி பயிலுனர் இளைஞனிற்கு நேர்ந்த புரிதாபம்

மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் (29) கட்டிடவேலை உதவியாளராக வேலை செய்யும் போது தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் அண்மையில் வெளியாகியுள்ள பட்டதாரி பயிலுனர் பெயர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் விரைவில் தனது கடமையினை பொறுப்பேற்கவிருந்த நிலையில் தனது வீட்டு கஷ்டநிலமை காரணமாக நாளாந்த கட்டிட வேலை உதவியாளராக …

Read More »

மகனை தேடிய மற்றுமொரு தாயும் மரணம்!! -முல்லையில் சோகம்

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு விசுவமடு மாவட்டத்தை சேர்ந்த மைக்கல் யேசுமேரி (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவருடைய மகன் 2009 ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார். அவரை தேடி அனைத்து முகாங்களுக்கும் சென்ற அவர் தனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களிலும் கலந்து …

Read More »

மரண அறிவித்தல் – செவ்வி பாலச்சந்திரன் ஹரணி

மரண அறிவித்தல் – செவ்வி பாலச்சந்திரன் ஹரணி தோற்றம் : 09.02.2004, மறைவு : 26.07.2020 வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும் மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பாலச்சந்திரன் ஹரணி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (26.07.2020) அன்று இயற்கை எய்தினார். அன்னார் பாலச்சந்திரன் லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும் செந்தூரனின் சகோதரியும் இராமலிங்கம் அமரர் பங்கையற்செல்வம், ராம்குமார் ( பாலா) வசந்தாதேவி, அமரர்களான சத்தியமூர்த்தி இராசலட்சுமி தம்பதிகளினதும் பேர்த்தியும் Dr.இராமச்சந்திரன் யசோதரா, …

Read More »