Breaking News

kalaiselvi

இதுவரை 58 நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்றுமுதல் மேலும் 24 நகரங்களில் உள்ள கடைகளை மூட வர்த்தக சங்க தலைவர்கள் மற்றும் நகர வர்த்தக சங்கங்களின் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இந்த நகரங்களில் மருந்து கடைகள், எரிவாயு நிரப்பு நிலையங்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மாத்திரமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 34 நகரங்களில் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன, முடக்கப்பட்டுள்ள நகரங்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உள்ளது. அதற்கமைய, பிபில, மொனராகலை, …

Read More »

சினிமா கதாநாயகியாகும் விஜய் டிவி நடிகை!

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கன்னடப் படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன், மிர்ச்சி செந்தில், கவின், ரியோ, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் என சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்றவர்கள் பட்டியல் மிகப்பெரியது. அதில் சிவகார்த்திகேயன் போன்ற ஒரு சிலரே வெற்றிப் பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட …

Read More »

இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் வீதி!

அரசாங்கத்தின் 100,000 கிலோமீற்றர் மாற்று கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அயகமவிலிருந்து கலவான வரையான 16.5 கிலோமீட்டர் நீள பாதையை புணரமைப்பு செய்யும் பணியை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ பொறியியலாளர் படையணியின் 12வது களப் பொறியாளர் படைப்பிரிவு இந்த புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 209 மில்லியன் ரூபா செலவாகும் …

Read More »

311 படுக்கைகள் கொண்ட புதிய கொவிட் சிகிச்சை பராமரிப்பு நிலையம்.

பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் சேவை மன்ற கட்டிடம் கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் மத்திய பாதுகாப்பு தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விகும் லியனகேவினால் சுகாதார அதிகாரிகளிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது. இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் …

Read More »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 27 டாக்டர்கள், 105 தாதியர் உட்பட 265 பேருக்கு கொவிட் -19

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களில்  265 பேருக்கு  கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்றைய (18) தினம் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக பரிசீலனைகள் ஊடாக தெரிய வந்துள்ளதாக, வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த 265 பேரில் 27 வைத்தியர்கள், 105 தாதியர்கள், 133 சிற்றூழியர்கள் உள்ளடங்குவதாக அந்த தகவல்கள் மேலும் உறுதி செய்தன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 17 சிகிச்சைப் பிரிவுகள் ( வோர்ட்) கொரோனா தொற்றாளர்களுக்கு என …

Read More »

புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கிளிநொச்சியில் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வவுனியாவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணம், விசுவமடுப் …

Read More »

மாத்தறையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம் .

மாத்தறை, பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. திமிங்கலம் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, பொலன்னறுவை, மின்னேரியா, ரத்மலே போன்ற பகுதிகளில் யானைகள் கழிவுகளை உணவாக உட்கொண்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். ஹிங்குராங்கொட பிரதேச சபையில் இருந்தே குறித்த கழிவுகள் அப்பகுதிகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அந்தக் கழிவுகளை உட்கொள்வதற்கான …

Read More »

இன்று முதல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்லலாம்; இராணுவ தளபதி.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வீட்டில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே இன்று (19) முதல் வௌியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமை போல செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (18) வெளியிடப்பட்டன.

Read More »

சாதாரண அறிகுறிகள் தென்படும் போது உதாசீனப்படுத்த வேண்டாம் – விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி.

சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பெருமளவான தொற்றாளர்களே ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுகின்றனர். தாம் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அறிந்திருக்காமை அல்லது சாதாரண அறிகுறிகள் தென்படும் போது அவற்றை உதாசீனப்படுத்தல் என்பவையே இதற்கான பிரதான காரணியாகும். எனவே சிறிதளவில் அறிகுறிகளை உடையவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு …

Read More »

வீட்டுக்கே மருந்துகளை வரவழைக்க விசேட இலக்கம் அறிமுகம்!

அரச வைத்தியசாலை கிளினிக்குகளில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீட்டுக்கு பெற்றுக்கொள்ள விசேட அலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0720720720 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More »