Breaking News

kalaiselvi

கொவிட்டின் புதிய திரிபு; ஒரு மணி நேரத்தில் 30 பேர் இறக்கும் அபாயம்!

கோவிட் வைரஸின் திரிபான எபிசிலோன் என பெயரிடப்பட்டுள்ள திரிபு நாட்டிற்குள் பரவினால், ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் இறப்பார் என அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஒரு மணி நேரத்தில் 30 பேர் இறக்கக் கூடும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த புதிய வைரஸை எதிர்கொள்ள மக்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி மூலம் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியும் போதாது என …

Read More »

சைனோபாம் தடுப்பூசி வழங்கும் முறை தவறு – பேராசிரியர் ஜீவந்தர எச்சரிக்கை!

இலங்கையில் கொவிட் தொற்றினை தடுப்பதற்காக சைனோபாம் தடுப்பூசி வழங்கும் முறை தவறானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார். சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கிய பின்னர் 3 வாரத்தில் இரண்டாவது டோஸ் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை மக்களுக்கு 4 வாரங்களின் பின்னரே இரண்டாவது டோஸ் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மிகப்பெரிய பிரச்சினையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 3 …

Read More »

பவித்திராவை காப்பாற்றும் பிரதமர்?

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது பதவியை தக்கவைத்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவித்ரா வன்னியாராச்சியின் தலையீட்டால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் பதவியை தக்கவைத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று நம்பப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, ரமேஷ் பத்திரணவுக்கு சுகாதார அமைச்சர் …

Read More »

கொரோனா மரணம் தொடர்பில் தாதி ஒருவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலால் பரபரப்பு!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் அச்சறுத்தலின் ஆபத்தை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஷ்பா ரம்யா டி சொய்ஸத சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில், கொவிட் காரணமாக இன்று (நேற்று) எங்களை விட்டு பிரிந்தவர்களின் எண்ணிக்கை 160. கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். நாளை நாங்கள் நேசித்தவர்களில் இந்த எண்ணிக்கை விடவும் அதிகமானோர் எங்களை விட்டு பிரியவுள்ளனர். இந்த …

Read More »

மகள் கண்முன் இறந்த தாய்: கணவனை பிடித்தவாறு விடைபெற்ற மனைவி – வைரலாகும் வைத்தியரின் பதிவு!

அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தமது மருத்துவமனையில் நிலைவும் கோவிட் நிலைமை மற்றும் நோயாளர்கள், உயிரிழப்பவர்கள் தொடர்பிலான பதிவொன்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் குறித்த மருத்துவர், அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனை தொடங்கப்பட்ட நாளிலிருந்து நான் கோவிட் வார்டில் பணியாற்றி வருகிறேன். நாம் 12 மருத்துவர்கள் கோவிட் வார்டுகளில் வேலை செய்கிறோம். இப்போது அவை நிரம்பிவிட்டன. …

Read More »

மீரா மிதுன் அதிரடியாக கைது!

நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், என்னை கைது செய்யவே முடியாது. …

Read More »

ஆட்பதிவு திணைக்களம் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது!

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உட்பட அனைத்து பொது மக்களுக்கான சேவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மற்றும் சகல மாகாண காரியாலயங்களை பொதுமக்களுக்காக திறக்கப்படாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள பிரதேச …

Read More »

யாழ். தென்மராட்சியில் 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

யாழ்.தென்மராட்சி – சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று 68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையின்போது 18 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், சாவகச்சேரி தனியார் நிறுவன ஊழியர், கொடிகாமம் மீன் சந்தை வியாபாரி, வெளிமாவட்டங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்துச் சாலை ஊழியர்கள் …

Read More »

பருத்தித்துறையில் இன்று 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

யாழ்.பருத்தித்துறை – பழவத்தைப் பகுதியில் இன்று 5 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவித்தன. குறித்த கிராமத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் இன்று காலை சுகாதாரப் பிரிவினர் அன்டிஜன் பரிசோதனை நடத்தியிருந்தனர். இதன்போது 5 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பிரிவுத் தகவல்கள் …

Read More »

அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

நாளை முதல் அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. அம்பலாந்தோட்டை நகரை சுற்றியுள்ள பிரதேசங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பிரதேசங்களில் இருந்து அம்பலாந்தோட்டை நகருக்கு மக்கள் அதிகளவில் வருவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு நடைமுறைப்படுத்தவும் பின்னர் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு விற்பனை நிலையங்களை திறப்பதா அல்லது தொடர்ந்தும் மூடுவதா …

Read More »