Breaking News

பட்டதாரி பயிலுனர் இளைஞனிற்கு நேர்ந்த புரிதாபம்

மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் (29) கட்டிடவேலை உதவியாளராக வேலை செய்யும் போது தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் நேற்று
வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் அண்மையில் வெளியாகியுள்ள பட்டதாரி பயிலுனர் பெயர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் விரைவில் தனது கடமையினை பொறுப்பேற்கவிருந்த நிலையில் தனது வீட்டு கஷ்டநிலமை காரணமாக நாளாந்த கட்டிட வேலை உதவியாளராக காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் செய்துகொண்டிருந்த நிலையில் நீர்த்தாங்கியினை சுத்தம் செய்ய மேலே ஏறிய போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் கடந்த 19ம் திகதி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று
(21) மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக காத்தான்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *