Breaking News

இரவு அம்மாவுக்கு மெசேஜ் செய்த மகள்! காலையில் நடந்த கொ டூரம்!

ஈரோட்டில் தாய்க்கு போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் ஒருவர் தற் கொ லை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் (28) – சத்யா (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சத்யாவுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற சத்யா 2 மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் கணவருடன் வந்து வசிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை சதீஷ்குமார் எழுந்து பார்த்தபோது சத்யா வீட்டில் தொட்டில் கட்டும் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற் கொ லை செய்துகொண்டுள்ளார்.

அதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்துவந்த பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே தனது தாய் பூங்கொடிக்கு நேற்று காலை சத்யா செல்போனில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது மர ணத்திற்கு கணவரே காரணம் என இருந்ததை அவதானித்து, ஓடிவந்த தாய்க்கு மகளின் மர ண செய்தியே கிடைத்துள்ளது.

உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *