Breaking News

மது போதையின் உச்சம்!! கிளிநொச்சி முறிப்பு பகுதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

குறித்த பகுதியில் காணப்படும் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

குறித்த விபத்தில் 18 வயது மதிக்கதக்க இரு இளைஞர்கள் பலியாகியதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் கிளிநொச்சி காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் உயிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்த மற்றைய இளைஞன் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

“ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளனர். அவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை. அத்தோடு மது போதையில் இருந்துள்ளனர்.

அவர்களது  மோட்டார் சைக்கிள் வீதி வளைவான பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி புற்களினாலான காணிக்குள் பாய்ந்துள்ளது.

விபத்தில் தூக்கி வீசப்பட்டவர்கள் புற்களாலான பகுதிக்குள் மறைந்துள்ளனர்.

அதனால் விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பின்னரே ஒருவர் சுய நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

ஏனைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *