Breaking News

கனடா பிரதமரின் மனைவிக்கே இந்த நிலையா?? அப்போம் சாதாரண மக்களின் கதி என்ன??

கொரோனா வைரஸ் ஆனது உலக நாட்டு மக்களையே நடுநடுங்க வைத்துகொண்டு இருக்கிறது. சீனாவில் 4000 ஆயிரம் இறந்துள்ளனர். மற்ற நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.

இதற்காக அனைத்து நாடுகளும், மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சற்று முன் வெளியான தகவலின்படி கனடா நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகேயருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அவருடைய ரத்தப் பரிசோதனை முடிவின்படி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பிரதமர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. ஒரு நாட்டின் பிரதமரின் மனைவிக்கே கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உலக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொ ரோனாவிற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடித்த மருத்துவர்கள்!

கொ ரோனாவிடம் இருந்து தற்காத்து கொள்ள அமெரிக்கா புதிய தடுப்பூசியை கண்டுப்பிடித்துள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) அதை மதிப்பீடு செய்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *