Breaking News

கணவன் மனைவி சண்டையில் சமாதானம் செய்ய வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்!

கணவன்- மனைவி சண்டையை சமாதானம் செய்ய வந்த அண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திழன் ரங்காபுரம் பூங்காவனத்தமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ்(வயது 48), இவரது மனைவி நிர்மலா.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.

கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட, நிர்மலாவின் அண்ணனான நந்தகோபாலன் சமாதானம் செய்து வந்துள்ளார்.இ

ந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வகணே‌ஷ், நிர்மலா ஆகியோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த நிர்மலா இதுகுறித்து செல்போனில் நந்தகோபாலனுக்கு தகவல் தெரிவித்தார்.

வேலைமுடிந்ததும் வேலூர் வந்த நந்தகோபாலன், செல்வகணேசிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார்.

அப்போது செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கும், நந்தகோபாலனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த உறவினர்கள் நந்தகோபாலனை கடுமையாக தாக்க, மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்த போதும், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சத்துவாச்சாரி பொலிசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கு தொடர்பில் மூவரை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள செல்வகணேஷ், அவரது அக்கா சாந்தி, அவரது கணவர் ரவி ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

உ யி ருடன் அண்ணனை இதில் வைத்து சா கு ம்வரை காத்திருந்த தம்பி: வெளியான பகீர் சம்பவம்!.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உ ட ல்நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை உ யி ருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *