Breaking News

வக்கில் வண்டு முருகனிற்காக மணியின் பொறுப்புக்கள் பறிக்கப்பட்டன: உத்தியோகபூர்வமாக அறிவித்த முன்னணி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணனிற்கு கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று(15) காலை கட்சியின் செயலாளரிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் மின்னஞ்சல் வழியாக மணிவண்ணனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினர்.

2009 ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று அளிக்கப்பட்டதன் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபியில் அகவணக்கம் செலுத்தி சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியினுடைய ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *