Breaking News

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கடந்த 5ஆம் திகதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு இலேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் இலேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பி.பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் உடல் சீராக இருப்பதாகவும், அச்சப்படும் அளவிற்கு ஏதுமில்லை என்றும் அவரது மகன் சரண் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *