Breaking News

எஸ்.பி.பி நலமாக இருக்கிறார்: மகன் சரண்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். இன்று மாலை இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பி.பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பியின் மகன் சரண் இன்று மாலை, அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை என விளக்கமளித்துள்ளார்.

About kalaiselvi

Check Also

சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *