Breaking News

பட வாய்ப்பு கிடைக்கவில்லை.. பிரபல நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு..!

தெலுங்கு சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வெளியான படம் புலி. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிஷா படேல். இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.

நிகிஷா படேல் தமிழில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான எண்ணமோ எதோ, நகுலன் நடிப்பில் நாரதன், அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த பாஸ் ஒரு ராஸ்கல், ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், நிகிஷா படேல் அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆகையால் தென்னிந்திய சினிமாவை விட்டு விலகுகிறேன். மீண்டும் லண்டனுக்குச் சென்று அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக் கொடுக்கப் போவதாவும், சினிமா மற்றும் சீரியலில் நடிப்பது மற்றும் ஆடிசன்களில் கலந்து கொள்ள போவதாக அவர் கூறினார்.

அவரது முடிவு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

About kalaiselvi

Check Also

சினிமா கதாநாயகியாகும் விஜய் டிவி நடிகை!

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கன்னடப் படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன், மிர்ச்சி செந்தில், கவின், ரியோ, வாணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *