Breaking News

கடனை திருப்பி கேட்டாரா?? யாழில் கத்தி குத்து!! -பட்டப்பகலில் பயங்கரம்

யாழ். வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள (  வேம்படி சந்திக்கு அருகாமையில் ) மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீதே கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

s. டினேஸ் ( வயது 41 ) என்பவரே இச்சம்பவத்தில் வயிற்று பகுதியில் கத்தி குத்திற்கு இலக்காகியுள்ளார்.

இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மூவர் கடையில் ஏனையவர்கள் உணவருந்த சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கொட்டன் மற்றும் கத்தியால் தாக்குதல் மேற்கொண்டு தப்பியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விற்பனை ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே இதற்கு காரணமாக இருக்கலாம் என காயமடைந்தவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *