Breaking News

தடைகளை மீறி செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஸ்டிப்பு

முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் பொலீசாரின் அச்சுறுத்தலையும் மீறி உணர்வுபூர்வமாக நினைவிற் கொள்ளப்பட்டுள்ளது.

நினைவு நிகழ்வினை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு பொலீசாராலும் படையினராலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்

தொடர்ந்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் நினைவேந்தல் இடம்பெறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவிற்கு அருகில் வழமையாக இடம்பெற்று வரும் நிலையில் குறித்த இடத்தில் நினைவேந்தல் நடத்த பொலீசார் தடை விதித்திருந்தனர்.

இருந்தபோதிலும் பொலீஸ் மற்றும் படையினரின் தடைகளையும் மீறி தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் அந்த இடத்திற்கு சென்றபோது பொலீசார் குறித்த இடத்தில் நிகழ்வு செய்யவேண்டாம் என்றும் வேறு இடத்தில் அஞ்சலி செலுத்துமாறு சிவாஜிலிங்கத்திடம் அறிவித்துள்ளார்கள்.

இருந்தும் வழமைபோல் நிகழ்வு செய்யும் அதே இடத்தில் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள் இதனை அவதானித்த அருகில் உள்ள தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களும் வந்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

நினைவேந்தல் இடம்பெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் பொலீசார் மற்றும் அரசபுலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்பவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக முற்றவெளியில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 14 ஆம் ஆண்டு  நினைவேந்தல் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்பட பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.

2006ஆம் ஆண்டு காலை 6 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இதன்போது 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர்.

அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம், புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

போரினால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *