Breaking News

யாழ்.பண்ணைப் பகுதியில் பெண்களின் ஆடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எச்சங்கள் வெளிப்பட்டன.

அந்தப் பகுதி 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் கோவில் வீதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஆடைகளை யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வீ.ரி.சிவலிங்கம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் பார்வையிட்டனர்.

மீட்கப்பட்ட எலும்பு கூடு மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை சான்றாக வைத்துக் கொண்டு, ஏனைய பகுதிகளை தோண்டி, வேறு சான்றுகள் உள்ளனவா என தேடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு வரும் வரை, மீட்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் மற்றும் ஆடைகளை அதே இடத்தில் வைத்து பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளதுடன், கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு கடமையில் அமர்த்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஏனைய பகுதிகள் தோண்டி, மீட்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *