Breaking News

டிப்பர் வாகனத்துடன் மோதி சம்பவ இடத்தில் பலியான இளைஞன்

கினிகத்தேன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரஞ்சிராவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று 05.03.2020. வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சிராவ அக்குலான பகுதியில் இருந்து கினிகத்தேன பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் கினிகத்தேன பகுதியில் இருந்து ரஞ்சிராவ அக்குலான பகுதி நோக்கி பயணித்த டிப்பரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 19வயதுடைய அனுச தில்ஷான் என கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

இதேவேளை சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சாரதியை நாளை (06.03.2020)வெள்ளிகிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை கினித்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *