Breaking News

புதுவருடத்துக்குள் 1000 ரூபா!! – உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி!

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பவளம் நிச்சயம் கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஊடகப்பிரதானிகளுடன் இன்று (05) நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ஆயிரம் ரூபா தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மலரவுள்ள புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமையும். அதாவது புதுவருடத்துக்கு முன்னர் சம்பள உயர்வு அவர்களின் கைகளுக்கு.” கிடைக்கும் என்றார் ஜனாதிபதி.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச வேதனமாக மார்ச் மாதம் முதல் ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பில் பலசுற்று பேச்சுகள் நடத்தப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள சூத்திரத்தின்படி, மார்ச் மாதம் வேலைசெய்யும் நாட்களுக்கான சம்பளம், ஏப்ரல் 10 ஆம் திகதியே கிடைக்கும்.

இந்நிலையிலேயே ஆயிரம் ரூபா கிடைப்பதை ஜனாதிபதி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *