Breaking News

போலி மருந்துகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

2017 நவம்பரில் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட ஒரு ஆய்வின் முடிவின்படி குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் விற்கப்படும் மருந்துகளில் 10இல் 1 போலியானது அல்லது தரமற்றது. போலி மருந்துப் பிரச்சினையானது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்சினையல்ல, மனிதசமூகம் முழுவதற்குமே இது பெரும் ஆபத்தாகும்.

தரமற்ற மருத்துகளை இனம்காணுவது சுலபமான வேலையல்ல. சிலவகை மருந்துகள் முற்றிலும் போலியாக இருக்க, சில ‘இறந்துவிட்ட’ மருந்துகளாக (அதற்கான வேலையைச் செய்யமுடியாதவை அல்லது பலன் தராதவையாக) இருக்கும். போலிமருந்துகளை உட்கொண்டால் சிகிச்சை தாமதமாவதுடன் ஆபத்தான பக்கவிளைவுகளும் ஏற்படலாம். நுகர்வோரின் வீட்டில் சோதிக்கும் கருவிகள் இருக்காது; ஆனால் போலி மருந்துகளை இனம்கண்டு அவற்றை முற்றிலும் தவிர்க்கச் சில வழிகள் உள்ளன.

இந்தியாவில் போலி மருந்துகளின் பிரச்சினை அதிகம். மருந்து கம்பெனிகள் அதிகலாபம் ஈட்டுவதால் போலி மருந்துகளைத் தயாரிக்க பலர் தயாராகவே உள்ளனர்; இதனால் மக்களின் உயிருக்கு பேராபத்து நேரிடும். ஒரு மருந்தின் உண்மைத்தன்மையைச் சோதிப்பது கடினம்தான்; ஆயினும் கீழ்க்காணும் செய்முறைகளைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.

1.பாக்கேஜை சோதிக்கவும்: மருந்தின் உண்மைத்தன்மையைச் சோதிக்க உதவும் மிகச்சுலபமான முறை இது. எழுத்துகளின் ஃபாண்டு, அச்சு வண்ணம் மாறுதல் மற்றும் எழுத்துப்பிழை ஆகியன உள்ளதா என்று பார்க்கவும். முன்பு நீங்கள் பயன்படுத்தியதைவிட இது வித்தியாசமாக இருக்கிறதா என நன்கு ஆராய்ந்து பார்க்கவும்.

2.சீல் உடையாமலிருத்தல்: பாதுகாப்புக்கான சீல் (குறிப்பாக பாட்டிலில்) சேதாரமடையாமல் இருக்க வேண்டும். சீலிங் டேப்பில் விரிசலோ அல்லது இடைவெளியோ இருக்கிறதா எனப் பார்க்கவும்.

3.டாப்லெட்/டானிக் உட்கொள்ளும் குறிப்புகளை சோதிக்கவும்: டாப்லெட் தோற்றத்தில் (வண்ணம், அளவு, சீராக இருத்தல், வடிவம், ஆகியவை) எந்த மாற்றமாவது தென்படுகிறதா எனப் பார்க்கவும்.

4.டாப்லெட்டின் இயற்பியல் குணங்கள்: உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்வது போல் டாப்லெட்டுகளில் பின்வரும் பொதுவான இயற்பியல் குணநலன்கள் இருக்கிறதா எனப் பார்க்கவும்.

டேப்லெட் சிறுதுண்டுகளாக இருத்தல் (அ) மருந்து கண்டெயினரில் அதீத அளவிலான மருந்துப்பொடி
டேப்லெட்டில் கீறல்/விரிசல் இருத்தல்
டேப்லெட் கண்டெயினரில் வேதிப்பொருள் கட்டிகள் இருத்தல்
டேப்லெட் மிக மிருதுவாகவோ/மிகக் கடினமாகவோ ஆகிவிடுதல்
டேப்லெட்டில் புள்ளி, வண்ணமற்று இருத்தல் (அ) உப்பி விடுதல்

5.ஒவ்வாமை/எதிர்பாராத பக்க விளைவுகள்: பல மருந்துகள் மிதமான பக்கவிளைவுகளைத் தருகின்றன. அவற்றை உட்கொள்ளும் முன் உங்களது டாக்டரிடம் ஆலோசனை பெற்றால்தான் தேவையற்ற ஒவ்வாமைகளிலிருந்து காக்க முடியும். மருந்துகளால் சில எதிர்பாராத/தீங்குதரும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக அதுபற்றி டாக்டரிடம் கலந்தாலோசிக்கவும்.

6.விலை: வழக்கத்தைவிட மிகவும் குறைவான விலைக்கு மருந்து விற்கப்பட்டால் அது போலியா எனச் சோதிக்கவும்; மருந்துகளை மலிவான விலைக்குத் தந்து நுகர்வோரைக் கவர போலி கம்பெனிகள் முயலக்கூடும்.

7.மருந்தை ஆன்லைன் (அ) குறுஞ்செய்தி மூலம் சோதிக்கவும்: போலி கம்பெனிகளிடமிருந்து நுகர்வோரை பாதுகாக்க பார்மாசெக்யூர் நிறுவனமானது மருந்து உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறது. மருந்து பாக்கேஜ், ஸ்ட்ரிப்புகளின் மீது UIC-உடன் ஒரு Barcode அச்சிடப்பட்டிருக்கும். குறியீட்டை 9901099010 என்ற எண்ணுக்கு நுகர்வோர் ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பினால் அம்மருந்தின் நம்பகத்தன்மை பற்றி உறுதிப்படுத்தும் செய்தி உடனடியாக மருந்து உற்பத்தியாளர்களால் அனுப்பப்படும்.

ஆன்லைன் சோதனை:

பார்மாசெக்யூர் இணையதளத்துக்குச் செல்லவும்.
உங்களது நாட்டைத் தேர்வு செய்யவும்.
உங்களது மொபைல் எண்ணையும் மருந்து ஸ்ட்ரிப்பிலுள்ள அதிகாரபூர்வ குறியீடையும் எண்டர் செய்யவும்.
‘வெரிஃபிகேஷன்’ எண்டர் செய்து ‘வெரிஃபை’ பட்டனை அழுத்தவும்.
அவ்வளவுதான்! இதைச் செய்து முடித்தவுடன், இதன் முடிவு உங்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் கிடைக்கும்.

குறிப்பு:
அதிகாரபூர்வ குறியீடானது பேட்ச் எண்ணிலிருந்து மாறுபட்டது.
விலையுயர்ந்த சில மருந்துகள் தவிர எல்லா மருந்துகளிலும் இந்த அதிகாரபூர்வ குறியீடு இருக்காது.

8.விற்பவர்கள்: மருந்துகள் உற்பத்தித் தொழிலில் பலவித பிராண்டுகள் உள்ளன. பிரபலமான மருந்துக்கடை (அ) பிரபலமான பிராண்டு மருந்துகளை வாங்கினால் போலி மருந்துகள் கிடைக்கும் வாய்ப்பு வெகுவாகக் குறையும். மருந்துவிற்க தகுதியற்ற, படிப்பறிவற்ற வியாபாரிகளிடமிருந்து மருந்துகளை வாங்குவதைத் தவிர்க்கவும்.

9.மருந்தில் விவரங்கள்: முதல் பாக்கேஜில் உள்ளது போலவே இதர பாக்கேஜுகளிலும் காலாவதி தேதி, பேட்ச் எண் மற்றும் உற்பத்தியாளரின் முகவரி ஆகியவை இருக்கின்றனவா எனப்பார்க்கவும். பேட்ச் எண்ணை ஆன்லைன் மூலமாகவும் சோதித்து நம்பகத்தன்மையைச் சோதிக்க முடியும்.

10.உற்பத்தியாளரின் முகவரியை சரிபார்க்கவும்: சுலபமாகத் தேடும் ஒரு கட்டமைப்பை வைத்துள்ள சர்வதேச, பிரபலமான கம்பெனியின் உற்பத்தியாக இருந்தால் உற்பத்தியாளரின் ஆதியந்தத்தைக் கண்டறிவது சுலபம். ஆனால் போலிமருந்து உற்பத்தியாளர்கள் முகவரியை அச்சிடுவதில்லை என்பதால் இது சுலபமல்ல. அச்சமயத்தில் உற்பத்தியாளர் முகவரியைத் தேடி சரிபார்க்க முடியுமா எனப் பார்த்து நாட்டின் பெயரைத் தவிர முகவரி தரப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

போலிமருந்துகளில் இருக்கும் அபாயங்கள்: போலிமருந்துகளால் ஏற்படும் அபாயங்களால் ஆரோக்கியத்தின் பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்:

போலி மருந்துகளில் தரப்பட்டுள்ள மருந்து பற்றிய விவரங்கள் துல்லியமாக இருக்காது.

வேறு பொருட்களால் மருந்து ஆக்கப்பட்டிருந்தால் அதனால் தீவிரப் பக்கவிளைவுகளள் ஏற்படலாம்.

போலி மருந்து உற்பத்தியான விதம் நல்லவழியிலோ அல்லது மருந்து தொழில்நுட்ப ஆலோசனை போர்டு கூறியுள்ள வழியிலோ இருக்காது.
நச்சுப் பொருட்களால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம்.

மருந்து பேக்கேஜில் தரப்பட்டுள்ள உற்பத்தியாளர் பற்றிய தகவல்கள் தவறானவையாக இருக்கலாம்.

சரியாக ஸ்டோர் செய்யப்படாமல் முறையான போக்குவரத்து மூலம் சரக்கு அனுப்பப்படாமல் இருந்திருக்கலாம்.

ஆயிரக்கணக்கான போலிமருந்துகள் சந்தையில் புழக்கத்தில் உள்ளன; இவை மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கணக்கிலடங்காதவை. இவை தீங்கு தரும், நச்சுத்தன்மை உடையவை என்பதால் இவற்றைத் தவிர்க்க சிறப்பான கவனம் தேவை. மேற்சொன்ன வழிகளைப் பின்பற்றினால் இவற்றை நாம் வாங்குவது தவிர்க்கப்படுவதுடன் நமது ஆரோக்கியமும் மேம்படும். இவ்வாறு செய்வதன் மூலம் போலிமருந்து சந்தையை அறவே ஒழிக்க நம்மாலான பங்கைப் பூரணமாக அளிக்க நம்மால் முடியும்.

போலிமருந்து பற்றிய செய்தி
1.மருந்துக்கடைரெய்டு: போலிமருந்துகளும் தப்பித்தோடிய கடைக்காரரும்

– செப்டம்பர் 21, 2018

FakeMattChuno ஹேஷ்டேகில் போலிமருந்துகள், இந்தியச் சந்தையில் அவை புழங்குவது பற்றி விழிப்புணர்வை உருவாக்க மெட்லைஃப் முயற்சிக்கையில் இது தொடர்பாக பிஜ்னோரில் ஒரு வழக்கு பதிவானது. மத்திய அரசின் FSDA (உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் ஆணையம்) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்கி அந்தந்த மாவட்டங்களில் போலி மருந்து உற்பத்தியாளர்களைக் கண்டுபிடிக்குமாறு பணித்தது. இக்குழு நூர்புர் நகர மருந்துக்கடை ஒன்றில் ரெய்டு நடத்தி போலிமருந்துகள் சேமித்து விற்கப்படுவதைக் கண்டுபிடித்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகளைக் கடையிலிருந்து கைப்பற்றி கடையையும் சீல் வைத்தது.

மருந்துகள் விற்க முறையாக உரிமம் பெற்றிருந்த மருந்துக்கடை முதலாளி FSDAவிடம் பதிவுசெய்யாத பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களின் பல்வேறு போலி மருந்துகளைத் தனது கடை மூலம் விற்றுவந்தார். மேலும் மருந்துக் கம்பெனிகளின் சாம்பிள் பேக்குகளையும் சோதனை நிறைவடையாத மருந்து வகைகளையும்கூட அவர் விற்றாராம். தலைமறைவாகி விட்ட முதலாளியை போலீசார் இன்றும் தேடிவருகின்றனர். கடையில் கைப்பற்றிய 10 உத்தேச சாம்பிள்களை சோதித்து கடை போலிமருந்து விற்பனையில் திளைத்து வந்ததை நிரூபிக்க அதிகாரிகள் முனைப்புடன் உள்ளனர்.

2.மூன்றாம் உலகநாடுகளில் மருந்துகளின் மோசமான தரம் மற்றும் போலி மருந்துகள் புழக்கத்தில் இருத்தல்:

– ஆகஸ்ட் 17, 218

நார்த்கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளின் மருந்துச் சந்தைகள் போலி மருந்து/தரமற்ற மருந்துகளால் பெரும் சரிவைச் சந்தித்தது தெரிய வந்தது. உலகில் போலிமருந்துகளின் சராசரி 13% என்றிருக்க, ஆப்பிரிக நாடுகளில் இச்சராசரி 19% ஆக இருந்தது. உலகில் புழக்கத்திலுள்ள இருவகை போலிமருந்துகள் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்:

உட்கொள்ளும் அளவு, மருந்தின் அளவு, தயாரிப்பு முறை மற்றும் தயாரிக்கத் தேவையான உபபொருட்கள் பற்றித் தவறான தகவலைத் தரும் போலிமருந்துகள்;

ஸ்டோரேஜ், தயாரிப்பு முறை, காலாவதி தேதி போன்றவை சரியாக இராத, பார்ப்பதற்கு உண்மையான மருந்து போலத் தோற்றமளிக்கும் தரமற்ற மருந்துகள்.

முந்தைய 96 ஆய்வுகளை ஆராய்ந்தபின் மேற்கண்ட ஆய்வானது போலியாக (அ) தரமற்றதாக தயாரிக்கப்படுபவை ஆண்டிபயாடிக்குகள் (12%), மலேரியா தடுப்பு மருந்துகள் (19%) என்று கண்டறிந்தது. ஆயினும், ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை சுகாதாரநலத்துறையின் மோசமான பிரச்சினை இதுமட்டுமே என்று சொல்லிவிட முடியாது என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

3.போலிமருந்துகளை ஒழிக்க உறுதியான திட்டம் தீட்டப் பாடுபடும் இந்திய அரசு:

– ஜூலை 26, 2018

2018 மே மாதத்தில் DTAB (மருந்துகளின் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம்) ஒரு ‘ட்ரேஸ் & ட்ராக்’ எனப்படும் திட்டத்தை போலிமருந்துகளை ஒழிப்பதற்கு வடிவமைத்தது. மத்திய அரசின் தலைமை மருந்து கண்காணிப்பாளர் போலி மருந்துகளின் பரவல், சரக்குப் பரிமாற்றம், சந்தைக்கு வருதலைத் தடுக்க ஒரு பணிக்குழுவை நியமித்தார். திட்டம் அமலாகும்போது வெற்றிகரமாக இருப்பதை உறுதிசெய்யும் அனைத்தையும் செய்து பிரசினைகளின் தீர்வுகளை இக்குழு கண்டுபிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பணிக்குழுவானது தனது நடவடிக்கைகள் பற்றி அறிக்கையை 2018 அக்டோபரில் தருமெனத் தெரிகிறது.

வாரியத்தால் ஒப்புதல் தரப்பட்ட இத்திட்டமானது உலகின் 300 முன்னணி மருந்து தயாரிப்பு பிராண்டுகளின் லேபிள்களில் உள்ள தனித்துவமான 14 இலக்க டிஜிடல் குறியீட்டெண் பற்றிக் குறிப்பிடுகிறது. மைய அமைப்பு ஒன்று விற்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கையைக் கண்காணித்து லேபிள்களில் உள்ள எண்களின் காலாவதி தேதி பற்றி அவ்வப்போது அப்டேட் செய்துவரும். நோயாளி 14 இலக்க டிஜிடல் குறியீட்டெண்ணை டைப் செய்து தரப்பட்டுள்ள எண்ணுக்கு அனுப்பினால் மைய அமைப்பானது அம்மருந்தைச் சோதித்து மருந்தின் காலாவதி தேதி பற்றிய ஒரு செய்தியை நோயாளிக்கு அனுப்பும்.

இந்திய மருந்து கட்டுப்பாளர் (Drug Controller of India) தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் போலிமருந்துகளைத் தயாரிப்பவர்களின் மனத்தில் பயத்தை விதைப்பதே உறுதிப்படுத்தும் திட்டத்தில் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டது. இதனால் கண்காணிப்பாளர்களின் வேலை அதிகரிக்கலாம் என்பதையும் இக்கூட்டம் கணக்கிலெடுத்துக் கொண்டது. தகவல் திரட்டி பதில் தரும் ஒரு மைய அமைப்பை உருவாக்கி அதற்கு தனித்துவமான எண்களையும் ஒதுக்க யாரை அணுகுவது என்ற தேர்வை மருந்து உற்பத்தியாளரிடமே விட்டு விடலாம் என அரசு ஏஜென்சிகள் முடிவெடுத்தன.

இது ஒரு புறமிருக்க, மறுபுறம் உற்பத்தியாளர்களும் தமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்: தேர்ந்தெடுத்த பிராண்டுகளுக்கு தனித்துவமான எண்கள் ஒதுக்குவதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பது அவர்களது வாதம். சலுகை கேட்டு விண்ணப்பித்துள்ள சிறு/குறுரக நிறுவனங்களுக்கு இச்செயல் துளியும் பிடிக்கவில்லை. இக்குறியீட்டெண்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு பற்றி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இத்தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி வரும் சில நிறுவனங்கள் இந்தியாவில் இதுபோன்ற தகவலைக் கேட்போர் ‘மிகச்சிலரே’ என்கின்றன. ஒப்பந்த உற்பத்தியாளர்கள் எழுப்பும் மூன்றாவது பிரச்சினை என்னவெனில் குறியீட்டெண் தரும் வேலை நடைமுறையில் மிகக் கடினமான ஒன்று என்பது.

பணிக்குழுவானது கொள்கைகளை இன்னும் உருவாக்கி வருகிறது; மேலுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட்டு விடுமா என்பது தெரியவில்லை.

4.‘ப்ளாக்செயின்’ உத்தி போலிமருந்துக்கெதிரான வெற்றியைத் தரும்

– ஜூலை 07, 2018

போலிமருந்துகள் உலகெங்கிலும் சொல்லொணாப் பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளன: முக்கியமாக, சுகாதாரநலம் அவ்வளவாக மேம்படாத மூன்றாம் உலகநாடுகளில் இவற்றின் பாதிப்பு அதிகம். பார்க்க அசல் போல இருக்கும் இவற்றை மக்கள் வித்தியாசம் தெரியாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். போலி மருந்துகளை ஒழிக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தபோதிலும் மருந்து சப்ளை செயினில் உள்ள மாபெரும் இடைவெளி காரணமாக அரசுக்கு இதில் போதிய வெற்றி கிடைக்கவில்லை.

உலகெங்கிலும் சப்ளை செயின் பாதுகாப்பை மேம்படுத்தி சுகாதாரநலத் துறையில் ப்ளாக்செயின் உத்தியைக் கையாண்டு போலி மருந்துகள் சப்ளை, விற்பனையைத் தடுக்க இந்திய ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ள்னர். இந்த உத்தியால் சப்ளைசெயினுக்குள் எது, யாரால், எங்கே டெலிவரி ஆகிறது போன்ற விவரங்களைச் சரிபார்க்க முடியும்.

இந்தியாவில் உற்பத்தியாகும் ஒவ்வொரு மருந்திலுமுள்ள UICயே (தனித்துவ அடையாள குறியீடு) ப்ளாக்செயின் தொழில்நுட்பம் துல்லியமாக வேலை செய்ய உதவுகிறது. ப்ளாக்செயின் மூலம் மருந்து செல்லுமிடங்கள் பற்றிய விவரங்கள் திரட்டப்படுகிறது. உத்தியைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதால் உற்பத்தியாவதிலிருந்து சரக்காக ஏற்றப்படுவது வரை மருந்தைப் பற்றிய எல்லா விவரங்களும் ரகசியமாக பதிவாகும். மருந்தின் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய வாங்குபவர்கள் மருந்திலுள்ள QR குறியீடைத் தமது ஃபோனால் ஸ்கேன் செய்து தகவலைச் சரிபார்க்கலாம். இந்திய அரசின் உதவி பெற்ற நிதி ஆயோக் போலிமருந்துக்கெதிராகப் போர் தொடுக்க ப்ளாக்செயின் உத்தி பற்றிய கருத்தாய்வுச் சான்றை உருவாக்கி வருகிறது.

உத்தரவாதம், நேர்மை, துல்லியமான முடிவைத் தரும் ப்ளாக்செயின் உத்தி ஆகியவை சுகாதாரத் துறைக் கட்டமைப்பில் பல்வேறு பயன்களைத் தரும் என்றும் கூறப்படுகிறது. மருந்து மோசடி பற்றிய தகவல்களை இந்த உத்தியால் உடனே கண்டுபிடித்துவிடலாம். அடுத்த 5 ஆண்டுகளில் மருந்துத் துறை, வாழ்வியல்சார் அறிவியல் துறை அதிகாரிகள் இந்த உத்தியைப் பின்பற்ற 83% வாய்ப்புள்ளதாகவும் இதனால் மருந்துகள் தொடர்பான மாபெரும் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்றும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

About kalaiselvi

Check Also

உங்கள் Smartphone-ல் இந்த 8 Apps இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்! கூகுள் எச்சரிக்கை

ஸ்மார்ட்போன்களில் நாம் பல்வேறு விதமான ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *