Breaking News

வீதியை விட்டு காட்டுக்குள் பாய்ந்த பேருந்து!! இரு உயிர்கள் பலி

செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பூவரசன்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ஏன்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
இன்று செவ்வாய்கிழமை காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்ற அரசு பஸ் பூவரசன்குளம், சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியைவிட்டு விலகியுள்ளது.

இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த 2 மாடுகள் உயிரிழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் அதிஸ்டவசமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *