Breaking News

சுத்துமாத்தின் கைக்கூலிகள் அட்டகாசம்

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அமரர் ரவிராஜின் உருவச்சிலையை மூடி சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் நேற்றைய தினம் கட்டப்பட்டிருந்த கறுப்பு, சிவப்பு துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.

இச்சிலையை தானே கட்டியதாக சுமந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்குவதற்காகவும், சிலை கட்டியதற்காக செலவினை ஒரு ரூபா வீதம் மக்களிடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் இவ்வாறான கிழ்த்தரமான வேலையை சுமந்திரனின் செம்புகளே மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் இருக்கும் மாமனிதர் ரவிராஜ்ஜின் சிலையில்
“சுமந்திரனின் சொந்த நிதியால் “ செய்யப்பட்டது எனுன் கல்வெட்டை அகற்றி தமிழ் மக்கள் எனும் பெயரினை அதுல் பதிக்க முயன்ற தென்மராட்சி இன உணர்வாளர்களுடன் தமிழரசுக்கட்சி ஜனநாயக பிரிவு இளைஞர்களும் இணைந்தார்கள்.

விரைவில் அந்த சிலையை அவமதிக்கும் விதமாக இருக்கும் அவரது பெயரை அகற்றுவதாக உறுதி கூறி இருக்கிறார்க்ள்

அத்தோடு, “ மாமனிதர்” எனும் கெளர்வமும் அதில் இடம்பெறும்.

மக்களிடம் ஒவ்வொரு ரூபா வீதம் பிச்சை பெற்று அந்த பணத்தை சிலைக்கான செலவு என “கெளரவ” சுமந்திரனிடம் கொடுக்க இளைஞர்கள் முஸ்தீபு!!

கடந்த முறை இதேபோல , ஈபிடிபி தவராசா முள்ளிவாய்க்கால் நிதிக்கு கொடுத்த காசை கேட்ட போது மாணவர்கள் ஒவ்வொரு ரூபா வீதம் மக்களிடம் சேர்த்து கொண்டு போய் கொடுத்தது ஞாபகம் இருக்கலாம்

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *