Breaking News

பிகினி உடையில் அனுஷ்கா சர்மா; 24 லட்சம் லைக்குகள் குவிந்தன!

பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா, பிகினி உடையுடன் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு சுமார் 24 லட்சம் லைக்குகள் குறிந்துள்ளன.

பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.

Image

குழந்தை பிறந்த பிறகு கிளாமரான புகைப்படங்களை அனுஷ்கா அதிகம் வெளியிட்டதில்லை. குறிப்பாக பிகினி உடை புகைப்படங்களை வெளியிடவேயில்லை. ஆனால், நேற்று (16) நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதற்கு 24 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

அந்த பிகினி உடையின் விலை மட்டும் 8 ஆயிரம் ரூபாவாம். அண்மையில் ஒரு செவ்வியில், குழந்தை பெற்றதற்குப் பிறகான உடல் தோற்றத்தைக் குறித்து நிறைய பேசியிருந்தார் அனுஷ்கா.

Image

தான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதை வெளி உலகத்திற்குக் காட்டவே அனுஷ்கா இந்த பிகினி உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகச் கூறுகிறார்கள்.

2018இல் வெளிவந்த ‘ஜீரோ’ படம்தான் அனுஷ்காவின் கடைசி ஹிந்திப் படம். கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் வெப் சீரிஸ்களை மட்டும் தயாரித்து வந்தார். விரைவில் புதிய படங்களில் அவரைக் கதாநாயகியாக எதிர்பார்க்கலாம் என பொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *