Breaking News

சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் விபத்து!! சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன் – படங்கள்

கிளிநொச்சி – பூநகரி சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டர் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி ஜெயந்திபுரத்தை சேர்ந்த நா.பிரசாந்த் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மகேந்திரா வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இரவு வேளைகளில் தானாக ஒளிரும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு காண்போரை கவரும் வண்ணமிகு பிரதேசமாக காணப்பட்ட பகுதி இன்று கவனிப்பார் அற்று மின்குமிழ்கள் ஒளிராத நிலையில் பராமரிப்பின்றி இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.உரிய தரப்பினர்கள் இது தொடர்பாக கவனத்தில் கொள்வார்களா என்பது கேள்விக்குறியே!!

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *