Breaking News

மாணவர்கள் மீது மோதிய கெப் வண்டி ஒருவர் பலி!! 11 பேர் படுகாயம்

அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 16
வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹியத்தகண்டியவில் இருந்து அரலகங்வில பகுதியை நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று மேலதிக வகுப்பொன்றிற்கு சென்று வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த மாணவர்கள் சிலர் மீது அதே திசையில் பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 11 மாணவர்கள் பொலன்னறுவை மற்றும் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.

ரத்மல்தென்ன பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

https://www.facebook.com/Putumaifm/videos/304745697634215/

கெப் வாகனத்தின் சாரதி தப்பி சென்ற நிலையில், பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரலகங்வில பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *