Breaking News

போர்ப்ஸ் இந்தியா அட்டைப்படத்தில் நயன்தாரா: ரசிகர்கள் விமர்சனம்!

போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் அட்டைப்படத்தில் நடிகை நயன்தாராவின் புகைப்படம் வந்திருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கோலிவூட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த நயன்தாரா அட்லி படம் மூலம் பொலிவூட்டுக்கு சென்றிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நயன்தாரா நடித்திருக்கும் அண்ணாத்த படம் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Image

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் புகைப்படம் வந்திருக்கிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெருமையடைந்துள்ளனர். அதே சமயம் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.

Image

ரசிகர்கள் கூறியிருப்பதாவது, போர்ப்ஸ் போன்ற பெரிய பத்திரிகையின் அட்டைப் படத்தை பார்த்தால் போட்டோஷாப் செய்தது போன்று மோசமாக இருக்கிறது. நயன்தாராவை ஒழுங்காகவே புகைப்படம் எடுக்கவில்லை. வேறு யார் மாதிரியோ தெரிகிறார்.

அவருக்கு அளித்திருக்கும் உடையும் மோசம். ஒரு லேடி சூப்பர் ஸ்டாரை இப்படித் தான் மோசமாக காட்டுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Image

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *