Breaking News

இன்றைய ராசிபலன்கள் 07-08-2020

ஸ்ரீ சார்வரி ஆண்டு – ஆடி 23 – வெள்ளிக்கிழமை (07.08.2020)
நட்சத்திரம் : பூரட்டாதி பகல் 2.28 வரை பின்னர் உத்திரட்டாதி
திதி : திருதியை அதிகாலை 0.29 வரை பின்னர் சதுர்த்தி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 9.15 – 10.15 / 4.45 – 5.45

வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

இன்றைய ராசிபலன்கள் 07-08-2020

Rasi

குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

Rasi

தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதிப் பெருகும். பெற்றோர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சாதிக்கும் நாள்.

உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்பு உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி காணும் நாள்.

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

எதிர்ப்பையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மகிழ்ச்சியான நாள்.

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்கள் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்

About kalaiselvi

Check Also

இன்றைய ராசி பலன்கள் – 06-08-2020

ஸ்ரீ சார்வரி ஆண்டு – ஆடி 22 – வியாழக்கிழமை (06.08.2020) நட்சத்திரம் : சதயம் பகல் 12.17 வரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *