Breaking News

Whats App-ல் இனி இதெல்லாம் வரும்.! செல்போன் பயன்படுத்துவோர் செம்ம கடுப்பு.!

வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை தானாக மறைய செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

இந்த அம்சம் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுந்தகவல்களை தானாக அழித்துவிடும். வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் இந்த அம்சம் வெவ்வேறு பெயர்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த அம்சம் முன்னதாக டிசப்பியரிங் மெசேஜஸ் என்ற பெயரில் காணப்பட்டது. தற்சமயம் இது டெலீட் மெசேஜஸ் என்ற பெயரில் சோதனை செய்யப்படுகிறது.

பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் அம்சத்தினை வாட்ஸ்அப் டெலீட் ஃபார் எவ்ரிவொன் என்ற பெயரில் வழங்கியதைத் தொடர்ந்து இந்த அம்சத்தின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய டெலீட் மெசேஜஸ் அம்சம் பயனர் குறிப்பிட்ட நேரத்தை குறித்ததும், குறுந்தகவல் அந்த நேரத்தில் தானாக அழிந்துவிடும். இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. மேலும் இதனை க்ரூப் அட்மின்கள் மட்டுமே இயங்க வைக்க முடியும்.

தற்சமயம் தனிநபர் உரையாடல்களில் இந்த அம்சத்தை பயனர்கள் பயன்படுத்த முடியாது.

புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களின் பழைய குறுந்தகவல்களை அழிப்பதன் மூலம் போன் ஸ்டோரேஜ் அளவை சேமிக்க முடியும்.

புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதால், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பேஸ்புக்கைப்போலவே இனி வாட்ஸ் அப் செயலியிலும் விளம்பரங்களை வெளியிடும் முறை, கூடிய விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை, உலகில் பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வாட்ஸ் அப் செயலியில் எந்த வித விளம்பரங்களும் வெளியிடுவது இல்லை.

இந்நிலையில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையிடையே, விளம்பரங்களை வெளியிட அந்நிறுவனம் முடிவுசெய்து உள்ளதாகவும், கூடிய விரைவில் இது அமல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பர நிறுவனத்தின் பெயர் மட்டும் சில நொடிகள் திரையில் தெரியும் என்றும் தேவைப்பட்டால் அந்த விளம்பரத்தை நாம் அந்த விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே youtube போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகம் விளம்பரம் வருவதாக புகார் தெரிவித்து வரும் செல்போன் பயன்படுத்துவோர். தற்போது இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் செம்ம கடுப்பில் உள்ளார்.

About kalaiselvi

Check Also

உங்க மொபைலில் இந்த செயலி இருந்தால் யோசிக்காமல் தூக்கிடுங்க! அனுமதி இல்லாமல் கோப்புகளை அக்சஸ் செய்யுமாம்!

கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் நமது செல்போன் பக்கமே சேர்க்க கூடாதவை. ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டத்தில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *