Breaking News

கவரும் ஆடையில் இணையத்தை தீப்பிடிக்க வைத்த பிகில் பட நடிகை

ரெபா மோனிகா ஜான் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு “ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்” என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த “ஜருகண்டி” திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். பின்னர் 2019-ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமாகியுள்ளார்.மலையாள படங்கள் மூலம் நடிகையானவர் ரெபா மோனிகா ஜான். ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த அவருக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் மூலம் தான் பெயரும், புகழும் கிடைத்தது.சின்னத்திரையில் பிரபலமான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.தற்போது லிப்ட் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகிறது. அடுதப்படியாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை அட்லீயிடம் உதவியாளராக இருந்த ஈநாக் ஏபிள் இயக்குகிறார். நாயகியாக பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இவர்களுடன் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட் ராமன், மேகி என்று அழைக்கப்படும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.“இத்தொடர் காதலை, காதல் உறவின் பிரச்சனைகளை பற்றி உணர்வுப்பூர்வமாக கூறும் ஒரு அழகான திரைக்கதை. இது பார்வையாளர்களை எளிதில், உணர்வுபூர்வமாக ஈர்க்கும் படியான படைப்பாக இருக்கும். எளிமையான மற்றும் யதார்த்தமான உரையாடல்கள் ஆன்மாவை ஈர்க்கும் இசை, கண்களை கவரும் ஒளிப்பதிவு, கச்சிதமாக பொருந்தும் இளம் நடிகர்கள் குழு, ஆகிய அனைத்தும் “ஆகாஷ் வாணி” தொடரை மிக அற்புதமான படைப்பாக மாற்றும்” என்கிறார் ஈநாக் ஏபிள். சமீபத்தில் ஒரு பேட்டியில், ப்ளஸ் டூ படிக்கிறப்போ, ஸ்கூல் டாப்பர் நான்.சின்ன வயசுல நிறைய மேடைகள்ல டான்ஸ், மியூசிக் பண்ணியிருக்கேன். ஆனா, ஒரு தடவைகூட நாடகத்துல நடிச்சதில்லை. எனக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம். படிச்சுக்கிட்டிருக்கும்போதே, நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான் படிச்ச `கிரைஸ்ட் யுனிவர்சிட்டி’ ரொம்ப ஸ்ட்ரிக்ட். தினமும் கிளாஸுக்கு சரியா போகலைனா, டிகிரி வாங்கமுடியாது. அதனாலேயே பல சினிமா வாய்ப்புகளை மிஸ் பண்ணிட்டேன். எம்.எஸ்.சி-யில் கெமிஸ்ட்ரி முடிச்சதும், பி.ஹெச்.டி பண்ணணும்னு ஆசை; கல்லூரிப் பேராசிரியர் ஆகணும்னு கனவு. மத்தபடி, ஹீரோயின் ஆகணும்னு கனவுலகூட நினைச்சதில்லை. ஆனா, சினிமாவுக்கு வந்ததும் எல்லாம் மாறிடுச்சு. இப்போ, ஐ லவ் சினிமா என்று கூறியுள்ளார்.இந்நிலையில், தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமானகவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *