Breaking News

விருப்பு வாக்கு: யாழில் கட்சிகளிற்குள் சூடான நிலைமை!

யாழில் வேட்பாளர்களிற்கிடையில் விருப்பு வாக்கு முரண்பாடு எழுந்துள்ளது. இதனால், மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சூடான நிலைமை காணப்படுகிறது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தை பெற்றுள்ளது. இந்த ஆசனத்தை விக்னெஸ்வரன், அருந்தவபாலன், அனந்தி ஆகியோர் குறிவைத்துள்ளனர்.

விருப்பு வாக்கை முறையாக எண்ணி, அதிக விருப்பு வாக்குடையவர்களிற்கே ஆசனம் வழங்கப்பட வேண்டுமென அருந்தவபாலன், அனந்தி ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த முறை தான் ஏமாற்றப்பட்டதாகவும், இம்முறை விட்டுத்தர தயாரில்லையென்றும் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சூடான நிலைமை காணப்படுகிறது.

இதேவேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தரப்பில் ஒரு ஆசனம் பெறப்பட்டுள்ளது. அந்த ஆசனம் மணிவண்ணனிற்குரியதா அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குரியதா என்ற குழப்பம் நீடிக்கிறது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிறிதரன், சசிகலா, சித்தார்த்தன், சுமந்திரனிற்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *