Breaking News

அரைநிர்வாணக் கோலத்தில் பெல்கனியிலிருந்து கார் மீது வீழ்ந்த யுவதி: (வீடியோ)

யுவதியொருவர் அரைநிர்வாண கோலத்தில் வீடொன்றின் பெல்கனியிலிருந்து கார் ஒன்றின் மீது வீழ்ந்த சம்பவம் தாய்வானில் இடம்பெற்றுள்ளது.

தாய்பே நகரில் இடம்பெற்ற இச்சம்பவம் கெமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த யுவதி தனது காதலருடன் அந்தரங்கமாக இருந்தபோது பெல்கனியிலிருந்து திடீரென காரிலிருந்து வீழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. இடுப்புக்கு கீழ் உள்ளாடை மாத்திரம் அணிந்த நிலையில் அவர் காணப்பட்டார்.

 வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது அவர் வீழ்ந்த நிலையில் அதிஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.

முதுகுப்பகுதியில் வலியை உணர்ந்தவராக காணப்பட்ட நிலையில், காரிலிருந்து எழுந்த அந்த யுவதியை, அவரின் காதலர் என நம்பப்படும் இளைஞர் ஓடி வந்து அரவணைத்துக்கொண்டமையும் கெமராவில் பதிவாகியுள்ளது.

தான் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தபோது பாரிய சத்தம் கேட்டதாகவும், அப்பெண் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *