Breaking News

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 11 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அக்கராயன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார்  மேறக்கொண்ட நடவடிக்கையின் போதே, சந்தேக நபர், முதிரை மரக் குற்றிகளுடன் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *