Breaking News

போலி கொவிஷீல்ட் தடுப்பூசிகள்; உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை.

இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் போலி கொவிஷீல்ட் தடுப்பூசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரதான கொவிட்19 தடுப்பூசியாக கொவிஷீல்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் போலி கொவிட்19 தடுப்பூசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட தடுப்புமருந்துகள் போலியானவை என கொவிட்ஷீல்ட் தடுப்புமருந்தை தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இத்தடுப்புமருந்து மக்களின் ஆரோக்கியத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன், அவற்றை விநியோகத்திலிருந்து அகற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *