வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் நெருங்கி பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுய தனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் அடிப்படையிலே அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.