Breaking News

ஊரடங்கினால் ஏற்படும் விலையேற்றத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்காது!

சுய விருப்பத்தின் அடிப்படையில் மூடப்படும் வர்த்தக நிலையங்களை பலவந்தமாக திறக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. ஆனால் எந்தக் காரணங்களுக்காகவும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையமும். புறக்கோட்டையும் மூடப்படாது.

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் இதன் பொறுப்பை அரசாங்கத்தால் ஏற்க முடியாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு தரப்பினர் குறைந்த மட்டத்தில் சிந்தித்து நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்என குறிப்பிடுகிறார்கள். நாட்டை முழுமையாக முடக்கும் தீர்மானத்தை எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. தீர்மானம் எடுப்பதும் பெரிய விடயமல்ல, கொவிட் -19 தாக்கத்துக்கு மத்தியி ல்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டை முழுமையாக முடக்கினால் உணவு உட்பட அத்தியாவசிய சேவை விநியோகத்தில் பாரிய பாதிப்பு ஏற்படும்.அத்தியாவசிய சேவையை விரும்பினாலும், விரும்பாவிடினும் முன்னெடுத்து செல்ல நேரிடும். நாட்டை முடக்கினால் அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடையும். இதன் பொறுப்பை அரசாங்கத்தால் ஏற்க முடியாது.

நாளை (19) முதல் லங்கா சதொச விற்பனை நிறுவனத்தின் ஊடாக நிவாரண பொதிகளை இரண்டு வார காலத்துக்கு கட்டணமில்லாமல் வீடுகளுக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *