Breaking News

மீரா மிதுன் மீது பாயும் குண்டர் சட்டம்?

அவதூறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று பொலிஸ் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் இருக்கும் பட்டியலின மக்களை பற்றி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். மேலும் தன்னை கைது செய்ய முடியாது என்றும், அது கனவில் தான் நடக்கும் என்றும் மற்றுமொரு வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியது தொடர்பாக மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கேரளாவில் தலைமறைவானார் மீரா மிதுன். அவர் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர்.

பொலிஸாரை பார்த்த மீரா மிதுன் கத்திக் கதறி ஆர்ப்பாட்டம் செய்து வீடியோ வெளியிட்டார். மேலும் சென்னைக்கு அழைத்து வந்த பிறகும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் கத்திக் கொண்டே இருந்தார்.

Bigg Boss Meera Mithun sexy photoshoot, Trending Viral On Social Media - TheNewsCrunch

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுனை ஆகஸ்ட் 27ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மீரா மிதுனும், அவரின் நெருங்கிய நண்பரான அபிஷேக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மீராவிடம் விசாரணை நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

Meera Mithun's Raunchy Bold Photo Takes Social Media By Storm, Fans Stunned - Filmibeat

கொலை மிரட்டல், மோசடி என்று மீரா மிதுன் மீது ஏற்கனவே 4 வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாயக்கூடும் என்று  பொலிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபை முடக்குமாறு  கோரிக்கை:

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு இந்திய குற்றபிரிவு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் மீரா மிதுன், பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

16 Mithun Body Measurement - Celeb Body Measurement

Actress Meera Mithun Hot Photoshoot Pictures 26 (574398) - Actress Meera Mithun Gallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *