Breaking News

3,000 போதை மாத்திரைகளைக் கொண்டு சென்ற மட்டு. வைத்தியசாலை ஊழியர் கைது!

மட்டக்களப்பின் கல்குடாவிலிருந்து கல்முனைக்கு 3,000 போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்துச் சென்ற மட்டு போதனா வைத்தியசாலையில் ஊழியர் ஒருவரை கல்முனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகலையடுத்து கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்

இதன்போது மட்டு கல்குடாவிலிருந்து கல்முனைக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழ் மறைத்து எடுத்து வந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் கல்முனை பகுதியில் அதனை நிறுத்தி சோதனையிட்டனர். இதன்போது 3,000 போதை மாத்திரைகளை கைப்பற்றியதுடன் அவரைக் கைது செய்தனர்

சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதாகவும் 32 வயதுடைய இவர் , கொழும்பிலுள்ள முகவரோடு நேரடியாக தொடர்பு கொண்டு போதை மாத்திரைகளை அழைப்பித்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் விற்பனை செய்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இனையடுத்து கைது செய்யப்பட்டவர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையின் ஒப்படைத்ததையடுத்து இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *