Breaking News

நடு வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்!! காதலியுடன் சென்றபோது விபரீதம்

வசந்த சொய்சா

வசந்த சொய்சா கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் இரான் ரணசிங்க எனப்படும் எஸ் எப் லொக்கா சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

எஸ் எப் லொக்கா மற்றும் அவரது காதலி சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த போது ,உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் எஸ் எப் லொக்காவின் காதலிக்கு எவ்வித ஆபத்துக்கும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எஸ் எப் லொக்கா தனது 32 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அனுராதபுரத்தில் உள்ள தஹியாகம சந்தியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பலம் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராத்தே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான எஸ்.எப் லொக்கா என்ற எரோன் ரணசிங்கவே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் எஸ்.எப் லொக்காவின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *