Breaking News

காதல் கடிதம் எழுத,‘புது ஆப்’ என்ன ஸ்பெஷல் தெரியுமா?

காதல்… என்று சொன்னதுமே மனசு குஷியாகிவிடுகிற விஷயம்தான். காதல் கடிதம் எழுதிக் காதலிக்க ஆசைப்படும் இளசுகளுக்காகவே இருக்கிறது ‘பெஸ்ட் லவ் லெட்டர் ரைட்டர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.

பெயருக்குத்தான் ‘லவ் லெட்டர் ரைட்டர்’ அப்ளிகேஷனே தவிர, இதில் நாம் விரல் வலிக்க டைப் பண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பெயரைப் பதிவுசெய்து, அதில் கேட்கும் சில விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

நம்முடைய ரசனைக்குத் தகுந்த மாதிரி, ‘மானே தேனே’ மாடல்களிலோ, ‘மாலினி இத நான் உங்கிட்ட சொல்லியே ஆகணும்’ வகை வாக்கியங்களிலோ, ‘முத்தழகு, இப்போ நீ முழுசா எனக்குள்ள வந்துட்ட’ வகை எழுத்துகளுமாகவோ அலங்கரிக்கும்.

பொறுமையாகப் படித்துப்பார்த்துப் பொருத்தினால் இனிக்க, மணக்க ஒரு காதல் கடிதம் தயாராகிவிடும். ஏனெனில், இந்த அப்ளிகேஷனில் 90 சதவிகிதம் நாம் டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

About kalaiselvi

Check Also

உங்க செல்போன் பேட்டரி சார்ஜ் தீராமல் இருக்க என்ன செய்யனும் தெரியுமா?

உங்க செல்போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் இருக்க சில வழிகளை பின்பற்றலாம். வைப்ரேட் போன் வைபரேட் மோடில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *