Breaking News

நாட்டை முடக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்!

இலங்கை மருத்துவ சங்கம், கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்று அறிவித்ததாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன  தெரிவித்தார்.

இலங்கை மருத்துவர் சங்கம் என்ற வகையில், இது தொடர்பில் எப்போதும் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர், சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தொடர்ந்து வலியுறுத்துவதாகவும்,  பத்மா குணரத்ன கூறினார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *