Breaking News

வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளர் தப்பியோட்டம்; பொலிசார் தேடுதலில்.

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நேற்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வாத்துவை பொத்துப்பிட்டிய தெல்கஸ் ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

நேற்றைய தினம் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞன் பாணந்துறை வைத்தியசாலையின் 4வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனக்கு அங்கு இருக்க முடியாது என தாதி ஒருவரிடம் கூறிவிட்டு அந்த இளைஞன் அங்கிருந்து சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்றவரை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு புலனாய்வுப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *