Breaking News

பணியின் போது டிக் டாக்.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைக்க கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்.!!

அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியை செய்தவாறே டிக் டாக் வீடியோ காட்சிகளை பதிவு செய்து சமூக பக்கத்தில் வெளியிடும் நிலையில், இவ்வாறாக செயல்பட்டு வரும் அரசு பேருந்து ஓட்டுனர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இவ்வாறாக டிக் டாக் செயலியின் காரணமாக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனை சரி செய்ய பணி நேரத்தில் அலைபேசி பயன்படுத்துதல் மற்றும் பெண்களிடம் தேவையில்லாமல் பேசுதல் போன்ற செயல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை கண்டுகொள்ளாத ஓட்டுனர்கள், இது குறித்து கவலையில்லாமல் டிக் டாக் விடீயோக்களை பதிவு செய்து வருகின்றனர். பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இதற்கான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

பெரும்பாலான ஓட்டுனர்கள் அலைபேசியில் பேசியவாறே பேருந்தை வேகமாக இயக்கி வருகின்றனர். பலர் சட்டையின் பட்டனை கழற்றிவிட்டு, ஸ்டியரிங்கை பிடிக்காமல் கெத்தான பாடலுக்கு வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

பணி நேரத்தில் ஆடல், பாடல் என திரைப்பட கதாபாத்திரங்களில் வரும் கவுண்டமணி, வடிவேல் மற்றும் சந்தானம் போன்று கமன்ட் செய்து வீடியோ பதிவு செய்து வருகின்றனர். சிலர் வேகமாக பேருந்தை இயக்கி பெண் பயணிகளுக்கு அருகே ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *