Breaking News

யாழில் 17 வயது மாணவனின் விபரீத முடிவு

வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரி  மாணவர் ஒருவர் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இரவு 7-30 மணியளவில் வீட்டில் விபரீத முடிவுஎடுத்து உயிரிழந்துள்ளார்

கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி வீதியில் இத்துயர சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தினம் நன்றாக விளையாடிக்கொண்டு இருந்த குறித்த மாணவர் தீடிரென பிழையான முடிவு எடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆர்த்தியன் வயது 17 என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

குடும்பத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றை அவரின் நண்பர்கள் நையாண்டி பண்ணியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு சடலம் உற்வினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *