Breaking News

ரயில் வரும் பாதையில் ஓய்வெடுத்தாரா?? இளம் குடும்பஸ்தரிற்கு நேர்ந்த பரிதாப முடிவு

கொழும்பு- மட்டக்களப்பு ரயிலில் மோதி குடும்பஸ்த்தா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாக பொலிஸா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் நேற்றிரவு வாழைச்சேனை நாவலடி மஜ்மாநகா் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பொலன்நறுவையை பிறப்பிடமாகவும் நாவலடியில் வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.அனீஸ் (வயது 27) என தெரியவந்துள்ளது.

வழமையாக, வீட்டுக்கு அருகாமையில் உள்ள புகையிரத பாதையில் இரவுச் சாப்பாட்டுக்கு பின்னர் ஆறுதலாக இருந்துவிட்டு வீடு வந்து நித்திரை கொள்வதனை இவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

அவ்வாறுதான் நேற்றிரவும் (25/02) 08.00 மணியளவில் புகையிரத பாதையில் கணவனும் மனைவியுமாக பேசிக்கொண்டிருக்கும் போது, பிள்ளைகள் நித்திரைக்காக அழும் சத்தம் கேட்க பிள்ளைகளை படுக்கவைப்பதற்காக மனைவி வீட்டுக்குள் செல்ல இவர் மட்டும் புகையிரத பாதையில் கால்களை நீட்டியவாறு ஆறுதலாக இருந்து கண் அயர்ந்துள்ளார்.

அவ்வேளையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் .செல்லும் புகையிரதத்தின் சத்தம் கேட்க, திடுக்கிட்டு எழுந்து ஓட முயற்சிக்கையில், சாறன் காலில் தடுக்கி புகையிரத பாதையில் இவர் விழுந்த அதே கணத்தில் புகையிரதத்தால் மோதப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *