Breaking News

வீதிகளில் வெடிபொருட்களா?

முல்லைத்தீவு – கரைதுறைபற்று வீதியில் வெடி பொருட்களின் அபாயம் உள்ளதாக கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் இ.ஹஜீதரன் தெரிவித்தார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வீதிக்கு விறகு சேகரிப்பதற்கு சென்ற நபரொருபர் வெடி பொருளில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின் அப்பகுதியில் வெடி பொருட்களின் அச்சம் உணரப்பட்டுள்ளது.

மக்கள் நடமாடுகின்ற பகுதிகளில் வெடி பொருட்களின் அபாயம் இருப்பது மக்களுக்கு உயிராபத்துகளை விளைவிக்கும் என தெரிவித்தார்.

வீதி பகுதியில் உள்ள வெடி பொருட்களை அகற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலகத்திற்கு உண்டு.

வெடி பொருட்களின் அச்சுறுத்தல், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய சுய தொழில் முயற்சிகளுக்கு பாதிப்புகளை உருவாக்கி உள்ளது எனவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *