Breaking News

அயன் பொக்ஸினால் 9 வயது சிறுவனுக்கு சூடு வைத்த பேய் கைது..!

9 வயதான மகனுக்கு அயன் பொக்ஸை பயன்படுத்தி உடல் முழுவதும் சூடு வைத்த குற்றச்சாட்டில் சிறுவனின் தாயை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இன்று முற்பகல் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தாயை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீக்காயங்களுக்குள்ளான சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர், மின்னழுத்தியை சூடாக்கி மகனை காயப்படுத்தியுள்ளமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதிலும், நேற்றைய தினமே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *