Breaking News

பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெனிங் சந்தையில் கடைக்கான அறை ஒன்றை பெற்றுத் தருவதாகத் தெரிவித்தும் கனடாவில் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறியும் குறித்த சந்தேநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


சந்தேக நபர்கள் போலியான ஆவணங்களைத் தயாரித்து வத்தளை மற்றும் ஜா – எல ஆகிய பகுதிகளிலுள்ள நபர்களிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து வெவ்வேறு நபர்களுடைய 98 போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் இ சுமார் 20 இலட்சம் ரூபா பணம் என்பன குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கனேமுல்ல மற்றும் அத்துருகிரிய உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *