Breaking News

தீவிரமடைந்துள்ளது டெல்டா; இனிவரும் காலங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும்!

நாட்டின் பல பகுதிகளிலும் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் 2,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இரு தினங்களாக நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் மிகவேகமாக வைரஸ் பரவுகின்றமையால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார தரப்பு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதைப் போன்றே மரணங்களும் அதிகரித்து வருகின்றன. நேற்று (11) மாத்திரம் 124 கொவிட் -19 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

அதற்கமைய நாட்டில் கொவிட் -19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5, 464 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த மரணங்களின் எண்ணிக்கை அடுத்த இரு வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை 2, 890 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் 339,092 கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 300, 406 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 33, 346 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *