Breaking News

யாழில் பஸ் பல்டி அடித்ததால் 24 பேர் படுகாயம்.

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது.

இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், வேகமாக வந்த பஸ் மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *