Breaking News

யாழில் ஆசிரியை ஒருவரிற்கு அடித்தது அதிஸ்டம்!! ஒரே சூலில் மூன்று குழந்தைகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று முந்தினம் (30) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது.

பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெறுவதற்கு தயாராகும் தாய்மார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டு வருகின்மை வழமையாக இருந்துள்ள நிலையில் வைத்திய நிபுணர் சரவணபவன் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர் ஜெயபாலன் ஆகியோரின் பங்களிப்புடன் நேற்று முந்தினம் (30) காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

https://www.facebook.com/Putumaifm/videos/372049124197685

இந்நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *